பாழடைந்து கிடக்கும் வீடு.. "வீட்டுக்கு வெளிய ஃபுல்லா".. பதற்றத்தை ஏற்படுத்திய புகைப்படங்கள்.. நீடிக்கும் மர்மம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 17, 2022 07:50 PM

அவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தினை செலவிடும் போது, மிகவும் வினோதமான அல்லது ஒரு நிமிடம் நம்மை அதிர்ச்சியில் உறைய செய்யும் ஏதாவது விஷயங்கள் கண்ணில் படலாம்.

abandoned house filled with coffin and furniture reclaim by nature

Also Read | "எங்க அப்பா சாகுறதுக்கு முன்னாடி எழுதுன Letter இது.." 9 வருஷம் கழிச்சு தெரிஞ்ச 'உண்மை'.. "புள்ளைங்க கையில் கிடைக்கும்னு தெரிஞ்சே எழுதி இருக்காரு"

அப்படி ஒரு விஷயம் தொடர்பான புகைப்படங்கள் தான், தற்போது இணையத்தில் வெளியாகி, பார்ப்போர் பலரையும் அப்படியே உறைய வைத்து வருகிறது.

இங்கிலாந்தின் Nantwich என்னும் பகுதியில் அமைந்துள்ளரது ஒரு பாழடைந்த வீடு. இங்கே யார் வாழ்ந்து வந்தார்கள் என்பது பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஆனால், அங்கே இருக்கும் பொருட்கள் தொடர்பான புகைப்படங்கள் தான், சற்று பீதியை கிளப்பும் வகையில் உள்ளது.

abandoned house filled with coffin and furniture reclaim by nature

அந்த வீட்டிற்கு வெளியே பழைய சவப் பெட்டிகள் கிடக்கிறது. அதே போல, இதனை தயாரிக்கும் பட்டறை ஒன்றும் அருகே இருப்பதால், அங்கே சவப் பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் வாழ்ந்து வந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இங்குள்ள புகைப்படங்களை நகர்ப்புற ஆய்வாளர் ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

abandoned house filled with coffin and furniture reclaim by nature

அதில் ஒரு கட்டிடம் முழுவதும் பச்சை பசேல் என மறைந்து போய் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், ஏராளமான சவப் பெட்டிகள் வீட்டுக்கு வெளியே கிடக்கும் நிலையில், அதில் பலவும் திறந்து கிடப்பதும் தெரிய வந்துள்ளது. சவப் பெட்டிகள் தவிர, பழைய தொப்பி, தூசி படிந்த குழந்தையின் தொட்டில், 60, 70 களில் வெளிவந்த நாளிதழ்கள், சில ஆவணங்கள் உள்ளிட்ட விஷயங்களும் இருந்துள்ளது. மேலும் துருப்பிடித்த டிரக், வொர்க் ஷாப் உள்ளிட்டவையும் அப்பகுதியில் இருந்துள்ளது. இது போக வீட்டிற்குள் உடைந்து கிடைக்கும் பர்னிச்சர்கள், பழைய படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளது.

abandoned house filled with coffin and furniture reclaim by nature

இந்த வீட்டில் யாருமே சரியாக வசிக்கவில்லை என்பது தெரிந்தாலும், சமீபத்தில் அத்துமீறி அங்கே சிலர் நுழைந்து முகாமிட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த இடத்தின் தற்போதைய உரிமையாளர் இதனை முழுவதுமாக இடித்து, புனரமைக்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

abandoned house filled with coffin and furniture reclaim by nature

உலகில் பல இடங்களில், இது போன்ற பாழடைந்த வீடுகள் இருந்தாலும், இந்த வீட்டிற்கு வெளியே சவப்  பெட்டிகள் உள்ளிட்ட மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான், பலரையும் மிரள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | பொண்ணுக்கும் பொண்ணுக்கும் நடக்கும் கல்யாணம்.. "Function முடிஞ்சதும் இத Follow பண்ணுவாங்களாம்".. வருசா வருசம் நடக்கும் வினோத சடங்கு!!

Tags : #ABANDONED HOUSE #COFFIN #FURNITURE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Abandoned house filled with coffin and furniture reclaim by nature | World News.