அமெரிக்காவில் வரவிருக்கும் புதிய சட்டம்.. மகிழ்ச்சியில் இந்தியர்கள்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 08, 2022 04:50 PM

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க புதிய சட்ட மசோதாவை உருவாக்கி வருகின்றனர் அந்நாட்டு நிபுணர்கள். இதனால் இந்தியர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

US Law Committee Passes Bill To Remove Green Card Cap

அமெரிக்க வரலாற்றுலயே இதான் முதல்முறை.. கொண்டாடப்படும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்.. யார் இவர்?

கிரீன் கார்டு

வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், விசா காலம் முடிந்துவிட்டால் நாடு திரும்ப வேண்டியதுதான். தொடர்ந்து வசிக்க வேண்டுமானால், அந்நாட்டில் வழங்கப்படும் கிரீன் கார்டை பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே, கிரீன் கார்டை வழங்கிவருகிறது அமெரிக்கா.

US Law Committee Passes Bill To Remove Green Card Cap

புதிய திருத்தம்

இந்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கிரீன் கார்டு வழங்கல் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர இருக்கிறது அமெரிக்கா. இதன்படி வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்ற விசாக்களில் ஒரு நாட்டிற்கு கிரீன் கார்டு வழங்குவதற்கான வரம்பை நீக்குவதற்கும், குடும்ப அடிப்படையிலான குடியேற்ற விசாக்களுக்கான ஒவ்வொரு நாட்டிற்கும் வரம்பை ஏழு சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிப்பதற்கும் வழிவகை செய்யும் அடிப்படையில் மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது அமெரிக்க நாடாளுமன்ற குழு.

US Law Committee Passes Bill To Remove Green Card Cap

2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் 4.2 மில்லியன் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். வேலை மற்றும் கல்விக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்பவர்கள் அங்கேயே செட்டில் ஆகிவிடவே பெரும்பாலும் விரும்புகின்றனர். இதனால் அமெரிக்க கிரீன் கார்டு வழங்க இந்தியர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மசோதா அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்  ஒப்புதலோடு சட்டமாகும்பட்சத்தில் அமெரிக்காவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்.

US Law Committee Passes Bill To Remove Green Card Cap

இதுகுறித்து பேசிய மசோதா உருவாக்கும் நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர் ஜோ லாஃப்கிரன்," ஒருவர் எந்த நாட்டில் பிறந்திருக்கிறார் என்பதன் அடிப்படையில் அல்லாமல் உண்மையான திறமையின் அடைப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டும் அப்படி திறமை வாய்ந்த நபர்களை தக்கவைக்கவும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன"என்றார்.

இதன் இடையே கிரீன் கார்டு வழங்கும் நடைமுறையில் அமெரிக்கா திருத்தம் கொண்டுவர இருப்பதாக அறிவித்திருப்பது அங்கு வசித்துவரும் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

"இன்னும் சில நாள்ல ஹாஸ்பிடல்-ல இருக்க பேஷண்ட் எல்லாம்".. இலங்கை மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

Tags : #US #US LAW COMMITTEE #GREEN CARD CAP #REMOVE GREEN CARD CAP #கிரீன் கார்டு #அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. US Law Committee Passes Bill To Remove Green Card Cap | World News.