'இனிமேல் அந்த கட்சிக்காரங்கள மட்டும்...' 'எங்க நாட்டுக்குள்ள குடியேற விடமாட்டோம்...' - அமெரிக்கா அதிரடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்இனி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற முடியாது என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா வலதுசாரி பொருளாதார தத்துவத்தை பிரதானமாக கொண்டு இயங்கும் நாடு. நூற்றாண்டுகளாகவே அமெரிக்காவிற்கும் இடதுசாரி நாடுகளான ரஷ்யா, சீனா போன்ற இடையே நெடுங்காலமாக பனிப்போர் நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவியது முதல் சீனாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் வலதுசாரி தத்துவத்தை கொண்டு இயங்கும் அமெரிக்கா இனி தங்கள் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும், உலகம் முழுவதும், எந்த நாட்டில் இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த உத்தரவினால் அமெரிக்காவின் குடியுரிமை, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.