'எப்போக்குள்ள எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்கும்?'... 'அப்ரூவ் ஆன 24 மணி நேரத்துல'... 'அதிபர் டிரம்ப் நம்பிக்கை தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
![US Every American Will Get Coronavirus Vaccine By April Trump US Every American Will Get Coronavirus Vaccine By April Trump](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-every-american-will-get-coronavirus-vaccine-by-april-trump.jpg)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 30 தடுப்பூசிகள் பரிசோதனை நிலைகளில் உள்ளன. இதற்கிடையே அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள சூழலில், அதற்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள அதிபர் டிரம்ப், "ஒவ்வொரு மாதத்திலும் நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும். நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு போதிய அளவு கிடைத்து விடும்" எனத் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)