'மதுபான விடுதியில்' ஊழியர்களுக்கு 'முத்தம்' கொடுத்த பெண்ணுக்கு.. 10 ஆண்டுகள் சிறையா?.. 'பரபரப்பு காரணம்!'
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சென்றுள்ளார். ஆனால் கொரோனோ பரிசோதனை செய்து முடித்துவிட்டு முடிவுகள் வருவதற்கு முன்னரே மதுபான விடுதிகளில் அவர் செய்த காரியம் அதிரவைத்துள்ளது.

ஜெர்மனியில் விடுமுறையின்போது அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வந்த புளோரிடாவை (Florida) சேர்ந்த Yasmin Adli என்கிற 26 வயது பெண்ணுக்கு திடீரென உடல் நலம் குன்றி அவர் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உண்டானது.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். ஆனால் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே ஜெர்மனியின் Garmisch-Partenkirchen பகுதியில் உள்ள பல மதுபான விடுதிகளில் சென்று அங்கு சில பார்ட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் இவருடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள் ஒருவர், Yasmin Adli மதுபான விடுதிக்கு வந்திருந்தபோது உடல் நலம் சரி இல்லாத நிலையிலும் பணியாளர்களுக்கு முத்தம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியை பொருத்தவரை தனிமைப்படுத்துதலை மீறினால் 2000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டுவரும் சூழலில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே மற்றவர்களை கொரோனா அபாயத்துக்கு தள்ளும் வகையிலும், அவர்களின் தொழிலில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு முத்தம் கொடுத்த Yasmin Adli-க்கு ஜெர்மனியில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்மையில் Garmisch-Partenkirchen நகரில் சமீபத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உண்டானதும் அவர்களில் 25 பேர் Yasmin Adli பணியாற்றும் அதே விடுதியில் பணி செய்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
