‘H1B விசா வழக்கு’.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்H1B விசா தடையை நீக்கக்கோரி இந்தியர்கள் தொடர்ந்த வழக்கு மீது நீதிமன்றம் தீர்வு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினர் H1B, H4 விசாக்களை பெற்று தங்கி வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த ஜூன் 22ம் தேதி முதல் H1B விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்க்கு பெரும் தீங்கு ஏற்படும் என அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த கொள்கையை எச்சரித்தனர்.
இந்தநிலையில் H1B விசாவுக்கு தடை கோரி கடந்த ஜூலை மாதம் இந்தியர்கள் அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
