“எல்லாரும் சீக்கிரம் வெளிய போங்க”.. 10 நிமிஷம் அமெரிக்காவை அதிர வைத்த விமானம்.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீதும் பறந்து வந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மேல் நேற்று மாலை 6 மணியளவில் மர்ம விமானம் பறந்து செல்வதாகவும், அதன்மூலம் ஆபத்து இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதனால் நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருப்பவர்கள் அனைவரும் உடனே வெளியேறுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது முக்கிய கூட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதால் எம்பிக்கள் யாரும் அங்கு இல்லை. இதனிடையே அந்த விமானத்தை ட்ராக் செய்தபோது அது ராணுவ பயிற்சி விமானம் என்பது தெரியவந்தது.
அந்த விமானத்தில் சென்ற கோல்டன் நைட்ஸ் படைப்பிரிவினர், நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் உள்ள பேஸ்பால் மைதானத்தில் பாராசூட் மூலம் தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மேரிலாந்து விமானதளத்தில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அவர்கள் புறப்பட்டு சென்றதாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அங்கு பரபரப்பு நிலவியதால், சிறிது நேரம் எம்பிக்கள் யாரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த விமானம் பறந்து வந்த 10 நிமிடம் அமெரிக்கா முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8