தாத்தாவின் 110-வது பிறந்த நாள்.. வடகொரிய அதிபர் போட்டுள்ள பகீர் திட்டம்.. அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா அடுத்த வாரம் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரிய நாடு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் 2006-ம் ஆண்டு முதல் இதுவரை 6 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது. அது ஹைட்ரஜன் குண்டு என தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருந்ததால் அணுகுண்டு சோதனைகள் நடந்தாமல் இருந்தனர். டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்தபோதும் கூட, அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தவில்லை.
இந்த நிலையில், வடகொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 110-வது பிறந்த நாள் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வருகிறது. தனது தாத்தா கிம் இல் சுங்கின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறக்து. அந்த நாள் அந்நாட்டுக்கு பொது விடுமறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாத்தாவின் பிறந்த நாளில் வடகொரிய அதிபர், அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அந்த அதிகாரி, ‘நான் அதிகம் ஊகிக்க விரும்பவில்லை. ஆனால், இது மற்றொரு ஏவுகணை சோதனையாக இருக்கலாம் அல்லது அணு ஆயுத சோதனையாகவும் இருக்கலாம். பதற்றம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் இன்றி கிம் இல் சுங்கின் 110-வது பிறந்த நாள் கடந்து சென்று விடாது’ என கூறியுள்ளார்.