“பெரிய ஹிட்டர்னு நம்பி எடுத்தா.. என்னங்க இப்படி விளையாடுறாரு”.. DC ஆல்ரவுண்டரை கடுமையாக விமர்சித்த ஆகாஷ் சோப்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஒருவரை ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Also Read | “என்னோட ஆசை இதுதான்”.. மலை மீது வருங்கால கணவரை கொல்ல முயன்ற ‘இளம்பெண்’ சொன்ன பரபரப்பு வாக்குமூலம்..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
ஐபிஎல் தொடரில் பல முறை கோப்பைகளை வென்ற சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதில் 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி பெற்று மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும், 6 போட்டிகளில் விளையாடிய ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று சிஎஸ்கே அணி 9-வது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல் அணியும் சொதப்பி வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரராக கருதப்படும் ரோமன் பவலை, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ரோமன் பவலின் ஆட்டம் என்னை வருத்தமடையச் செய்துள்ளது. டெல்லி அணியின் பின்வரிசையில் பலம் வேண்டும் என்பதற்காக அவரை ஒரு ஹிட்டர் என நம்பி ஏலத்தில் எடுத்தனர். ஆனால் இதுவரை அவரிடமிருந்து மிகப்பெரிய ஆட்டம் வெளிவரவில்லை. இனி வரும் போட்டிகளில் அவர் ரன்களை குவிப்பார் என நான் ஆவலாக காத்துள்ளேன்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோமன் பவலை 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதனால் அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8