'சரத்குமாருக்கு கொரோனா தொற்று'... 'உறுதி செய்த மனைவி'... ஐதராபாத்தில் சிகிச்சை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், திரைத்துறை பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சரத்குமார் உள்ளார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்துத் தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Today Sarath tested positive for Coronavirus in Hyderabad. He’s asymptomatic and in the hands of extremely good doctors! I will keep you updated about his health in the days to come. @realsarathkumar @rayane_mithun @imAmithun_264 @varusarath5
— Radikaa Sarathkumar (@realradikaa) December 8, 2020

மற்ற செய்திகள்
