‘தமிழகத்தில் முதல்கட்டமாக ’... ‘இத்தனை லட்சம் பேருக்கு’... ‘கொரோனா தடுப்பூசி’... வெளியான தகவல்...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ஃபைசர் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக பிரிட்டனில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, பஹ்ரைன், இஸ்ரேல், பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசியை அனுமதி அளித்துள்ளன.
இந்தியாவிலும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு மையத்தில் 3 இந்திய நிறுவனங்கள் தடுப்பூசி அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி விநியோக ஏற்பாட்டை உறுதி செய்ய கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் என முன் கள பணியாளர்கள் மற்றும், முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2800 மையங்களில் தடுப்பூசியை இருப்பு வைத்து பயன்படுத்தவும், 51 மையங்களில் பதப்படுத்தி வைக்கவும் வசதிகள் உள்ளன. இந்த மையங்கள் அரசு மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை இருக்கின்றன. இந்த மையங்களில் 2 கோடி பேருக்கான தடுப்பூசியை இருப்பு வைப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
