திடீர்ன்னு வானத்துல தோன்றிய வண்ண வெளிச்சம்.. ஆய்வாளர்கள் காரணத்தை சொன்னதும் இன்னும் ஷாக் ஆகிட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் வித்தியாசமான வண்ண வெளிச்சம் வானில் ஏற்பட்டிருக்கிறது. இது மக்களை ஆச்சர்யப்பட வைத்த நிலையில் அதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | "இன்னைக்கும் நாளைக்கும் வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க".. நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு..!
கடந்த செவ்வாய்க்கிழமை கனடா நாட்டின் வடக்கு பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் வானில் இந்த வித்தியாசமான வெளிச்சத்தை பார்த்ததும் உடனடியாக புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்த நிலையில் இதற்கான காரணம் தற்போது தெரியவந்திருக்கிறது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சூரியனில் உருவான சூரிய புயல்கள் காரணமாக இந்த வெளிச்சங்கள் ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சூரிய புயல்
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய நட்சத்திரமான சூரியன் தற்போது தனது 11 வது சூரிய சுழற்சியில் உள்ளது. அணுக்கள் ஒருங்கிணைவதால் உருவாகும் கணிசமான வெப்பமே சூரியன் தொடர்ந்து ஒளிர காரணமாக அமைந்திருக்கிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக சில சமயங்களில் சூரியனின் வெளிப்புற பரப்பில் இருந்து வெடிப்பு ஏற்பட்டு சூரிய துகள்கள் மற்றும் மின்காந்த அலைகள் பிற கிரகங்களை நோக்கி தள்ளப்படும். இதனை கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்கிறார்கள். மேலும் இது சூரிய புயல் எனவும் அழைக்கப்படுகிறது.
STEVE
சூரிய புயலின் காரணமாக வலுவான வெப்ப உமிழ்வு அதிவேகமாக ஏற்படுவதே STEVE (Strong Thermal Emission Velocity Enhancement) எனப்படுகிறது. இது மெல்லிய நீல நிறத்துடன் காணப்படும். வழக்கமாக நீல நிறத்தை சுற்றி பச்சை நிறம் தோன்றும். கனடாவில் தோன்றிய இந்த பச்சை நிற வெளிச்சம் 2 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் STEVE 40 நிமிடங்களுக்கு நீடித்திருக்கிறது. முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த STEVE கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கனடாவில் தோன்றிய இந்த நிகழ்வை ஆலன் டயர் என்பவர் புகைப்படம் எடுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A great showing of @STEVEPhenomena last night, Aug 7-8, arcing across the sky, and showing his green fingers briefly for about 2 minutes. STEVE lasted about 40 minutes, appearing as the Kp5 aurora to the north subsided. This was 12:30 am MDT from southern Alberta. @TweetAurora pic.twitter.com/EtKF6udfFk
— Alan Dyer (@amazingskyguy) August 8, 2022