"நாட்டுக்காக ஆயுதம் ஏந்தினேனா? போஸ் இதுக்கு தான் கொடுத்தேன்"! மிஸ் உக்ரைன் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனில் படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்யா சில நகரங்களைக் கைப்பற்ற ஆரம்பித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்:
சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது இப்போது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அதற்குக் காரணம் அமெரிக்க நட்புநாடுகளின் கூட்டமைப்பான நேட்டோ படைகளில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையே புகைந்து கொண்டு இருந்தது.
இதையடுத்து கடந்த வாரம் ரஷ்யா உக்ரைனுக்குள் தன்னுடைய ராணுவத்தை அனுப்பி போரை தொடங்கியது. உக்ரைனின் சில முக்கியப் பகுதிகளை தாக்கியது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அதே போல சீனா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
போரில் ஏற்பட்ட இழப்புகள்:
போரில் உக்ரைனின் சில முக்கியமான நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதே போல இதுவரை 6000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது. போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு உள்நாட்டிலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுவாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 5000 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரலான மாடல் அழகி:
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உக்ரைனைச் சேர்ந்த மாடல் அழகியான அனஸ்தாசியா லென்னா என்பவர் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. கையில் துப்பாக்கியோடு ராணுவ உடையோடு அவர் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. அந்த புகைப்படங்கள் வைரலாகவே பலரும் அதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வந்தனர்.
ஆனால் அதைப் பற்றிய உண்மையை இப்போது லென்னா வெளிப்படுத்தியுள்ளார். தான் ராணுவத்தில் இணையவில்லை என்றும் ராணுவத்தில் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையில் பொம்மை துப்பாக்கியோடு ராணுவ வீராங்கனை போல போஸ் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.