IPL2022: RCB அணியின் புது கேப்டன் யார்? இந்த 3 பேருக்கு தான் சான்ஸ்.. அணி நிர்வாகம் கொடுத்த அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 02, 2022 12:35 PM

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய ஐபில் போட்டி தொடரின் 15 வது  சீசன் மார்ச் 26-ம் தேதி துவங்கி, மே மாதம் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் 12, 13 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்றனர்.

Who will be the next Captain of RCB here is the update

Russia – Ukraine Crisis: "உக்ரைனுக்கு துணை நிற்போம்".. ஆப்பிள் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு..

இதனை அடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளையும் இரண்டாக பிரித்து போட்டி அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் பல அப்டேட்களை அளித்துவந்தாலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி இன்னும் கேள்வியாகவே இருக்கிறது.

பொறுப்பை துறந்த கோலி

கடந்த 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி.

Who will be the next Captain of RCB here is the update

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்," பெங்களூரு அணியை கோலியே வழி நடத்த வேண்டும். புது கேப்டனை அந்த அணி தேர்தெடுக்கும் வரை அவரே அந்த பொறுப்பில் இருக்க வேண்டும்" என விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், ஆர்சிபி அணியின் கேப்டன் பதவிக்கு 3 வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யார் அந்த 3 பேர்?

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரது பெயரை அந்த அணி பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய பெங்களூரு அணியின் மூத்த அதிகாரி ஒருவர்," எங்களுடைய அணியில் கேப்டன் பதவிக்கு தகுதி வாய்ந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். கோலியையும் ஆர்சிபி அணியையும் தினேஷ் கார்த்திக்கிற்கு நன்கு தெரியும். மேக்ஸ்வெல் ஒரு வருடமாக எங்கள் அணியில் இருக்கிறார். இதேபோல் டூ பிளசிஸ் தென்னாப்பிரிக்காவின் ஒரு அற்புதமான கேப்டனாக இருந்தார். ஆனால் எங்களுக்கு யார் சிறந்தவர் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். விரைவில் கேப்டன் தேர்வு குறித்த தகவல் வரும்” என்றார்.

Who will be the next Captain of RCB here is the update

குழப்பம்

தினேஷ் கார்த்திக் கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் கொல்கத்தா அணிக்கு அவர் கேப்டனாக இருந்தவர் என்பது அவருக்கு ப்ளஸ். அதே வேளையில் டு பிளசிஸ் தென்னன்னாபிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதற்கிடையே கிளன் மேக்ஸ்வெல் தனது திருமணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 6-ம் தேதி வரை ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடப்பு தொடரில் ஆர்சிபி அணியை வழிநடத்தப்போவது யார் என சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

"இதுதான் கடைசி.. இந்த முறையாவது கோர்ட்டுக்கு நேரில் வாங்க".. ஜடேஜா மனைவிக்கு கோர்ட் கொடுத்த சம்மன்..!

Tags : #CRICKET #CAPTAIN OF RCB #IPL2022 #TEAM MANAGEMENT #புது கேப்டன் #அணி நிர்வாகம் #கிரிக்கெட் #பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Who will be the next Captain of RCB here is the update | Sports News.