செய்யாத குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. 14 ஆண்டுகள் கழித்து தெரிய வந்த 'உண்மை'.. "அடப்பாவி, எல்லாம் பண்ணது நீ தானா?"
முகப்பு > செய்திகள் > உலகம்20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, தவறாக தண்டனை பெற்ற ஒருவர், விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் செய்தது யார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அவரு எல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா?".. இந்திய வீரரை கிழித்து தொங்க விட்ட முன்னாள் வீரர்
கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றின் பெயரில், கெவின் டகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த வாரம், கெவின் நிரபராதி தான் என தீர்ப்பு வழங்கப்பட்டு, விடுதலையும் செய்யப்பட்டுள்ளார்.
கண்ணீர் விட்ட கெவின்
கெவின் தவறு செய்யாத போதும், இத்தனை ஆண்டுகள் அவர் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். ஜெயில் தண்டனை முடிந்து, வெளியே வந்த கெவின், கண்ணீர் விட்டு அழுதார். விடுதலை மனிதனாக மாறியுள்ள கெவின், இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்த தனது குடும்பத்தினருடன் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி தகவல்கள்
அது மட்டுமில்லாமல், கெவின் ஜெயிலுக்கு சென்ற போது, இருந்த வெளி உலகுக்கும் தற்போதுள்ள வெளி உலகுக்கும் அதிக வித்தியாசம் உள்ளதால், தன்னை அதனுடன் இணைத்துக் கொள்ள, சற்று அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. தான் ஈடுபடாத துப்பாக்கி சூட்டிற்கு, தவறான தண்டனையின் பெயரில், கெவின் குற்றவாளியாக மாறி, ஜெயில் சென்ற பிறகு தான் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை கிடைக்கவில்லை
அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு, துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, கெவினின் இரட்டை சகோதரரான கார்ல் ஸ்மித் என்னும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. திடீரென வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனை அமைந்த போதும், கெவினுக்கு உடனடியாக விடுதலை கிடைக்கவில்லை.
ஆள் மாறாட்டம்
தனது சகோதரரை போல ஆள் மாறாட்டம் செய்து, துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் தான் தனது சகோதரர் கெவின் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதையும், ஸ்மித்தே ஒப்புக் கொண்டார். 'நானும், கெவினும் எந்த வித்தியாசம் இல்லாத இரட்டையர்களாக இருந்ததால், மாறி மாறி, ஒரு வேடிக்கைக்காக நாங்கள் ஆள் மாறாட்டம் செய்வோம். அதனை பயன்படுத்தி தான் குற்றம் செய்தேன்' என கடந்த 2016 ஆம் ஆண்டு, கார்ல் ஸ்மித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தைரியம் இல்லை
அது மட்டுமில்லாமல், தான் செய்த குற்றத்திற்காக, ஜெயில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த கெவினுக்கு கடிதங்களையும் ஸ்மித் எழுதியுள்ளார். அதில் ஒரு கடிதத்தில், 'நான் தான் துப்பாக்கி மூலம் ஒருவரை சுட்டுக் கொன்றேன். அந்த நேரத்தில், குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் போனதற்கு காரணம், அதற்கான தைரியம் என்னிடத்தில் தோன்றாமல் போனது தான்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நிரபராதி
2016 ஆம் ஆண்டு, தன்னுடைய குற்றத்தை ஸ்மித் ஒப்புக் கொண்ட போதும், 2018 ஆம் ஆண்டு, மீண்டும் இந்த வழக்கில் ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட் நிகழ்ந்தது. ஒரு நீதிபதி, ஸ்மித்தின் வாக்குமூலம் நம்பகமானதாக இல்லை என்று தீர்ப்பளித்தார். ஆனால் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறகு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் தான், கெவின் விடுதலை பெற்று வெளியே வந்துள்ளார்.
99 ஆண்டுகள் சிறைத் தண்டனை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மற்றொரு சகோதரர் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும், நீதிமன்ற சிக்கல்களால், தற்போது தான் கெவினுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அதே போல, குற்றத்தை ஒப்புக் கொண்ட கார்ல் ஸ்மித்துக்கு, 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மற்ற செய்திகள்
