'இதுதான் கடைசி மாதம்!'.. இதைச் செய்யாவிட்டால் தடை தான்! அவசர அவசரமாக களத்தில் இறங்கும் பிரித்தானியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த மாதத்திற்குள் பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட் விடுவிக்காவிட்டால் பலமில்லியன் பிரித்தானியர்கள் புத்தாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முடியாத ஒரு சூழல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய பாஸ்பார்ட் விதிமுறைகள் 2021 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து மாற்றப்படுவதால், இந்த மாதத்திற்குள் பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இல்லாவிடில் ஜனவரி மாதத்திலிருந்து அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதத்திற்கும் குறைவான காலாவதி காலத்தில் இருக்கும் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனிமேல் செல்லாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது 2021 கோடைகாலத்தில் காலாவதியாகும் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், அடுத்த காலமான இளவேனிற் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கான தடைகள் உருவாகும் சூழல் உண்டாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒன்பதரை ஆண்டுகள் பழமையான பாஸ்போர்ட்டுகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிகிறது.
இதேபோல் செல்லப் பிராணிகளுக்கான பாஸ்போர்ட் செல்லாது என்பதால் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் இனி தங்கள் செல்லப்பிராணிகளை வெளிநாட்டுக்கு தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமானால் அவற்றுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளன என்பதை நிரூபிப்பதற்கான கால்நடை மருத்துவ சான்றிதழும் உடன் கொண்டு செல்ல வேண்டியதிருக்கும்.
எனவே பிரித்தானியர்கள் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கத் தொடங்குகின்றனர்.