‘அனைத்து வயதினரையும் கண் கலங்க வைத்த புகைப்படம்’.. இரவோடு இரவாக UK அமைச்சர்கள் அறிவித்த ‘நெகிழ வைத்த’ முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் Cornwall என்கிற முதியோர் இல்லத்தின் தோட்டத்திலிருந்து, Dave Stallard என்கிற முதியவர் ஒருவரை வீல்சேரில் செவிலியர் ஒருவர் கொண்டு வந்து நிறுத்தியிருக்க அவருடைய மனைவி Irene சாலையோரம் உள்ள தடுப்பிற்கு அந்த பக்கம் முழங்காலிட்டு அங்கிருந்து கணவருடன் பேசும் காட்சி பலரையும் உலுக்கியுள்ளது.

இதுபற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார செயலர் Matt Hancock பேசும் போது அவர் கண்களில் கண்ணீர் தடுமாறியதை நாடே பார்த்தது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் உறவினர்களை குறிப்பாக முதியவர்களை சந்திக்க முடியாமல் தடுத்தால் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை என்பதால் இரவோடு இரவாக முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரிட்டன் அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி பிரிட்டனில் உள்ள அனைத்து முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், அனைத்து முதியோர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று 30 நிமிடத்திற்குள் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய பரிசோதனைகளை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு தங்கள் உறவினர்களை பாதுகாப்பு உடைகளுடன் சென்று சந்திக்கலாம், கை கொடுக்கலாம், ஒரிரு முறையாவது கட்டி அணைத்துக் கொள்ளலாம் என்று HELEN WHATELY,Matt Hancock உள்ளிட்ட அமைச்சர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
