கலங்கிப்போன மக்கள்..! இனி வரப்போற நாட்கள் ரொம்ப முக்கியம்.. துருக்கிக்கு ஐநா கொடுத்த அலெர்ட்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 08, 2023 01:17 PM

துருக்கி மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவை புதிய எச்சரிக்கை ஒன்றை அளித்திருக்கிறது.

Turkey Earthquake death toll may increase 8 times says UN

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்த பாட்டு வேண்டாம்.. கல்யாண வீட்டுல வந்த தகராறு.. வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.

ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான  சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Turkey Earthquake death toll may increase 8 times says UN

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளன. இருப்பினும் துருக்கியில் நிலவிவரும் அசாதாரணமான வானிலை காரணமாக மீட்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 8 மடங்காக அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய WHO இன் ஐரோப்பாவிற்கான மூத்த அவசரநிலை அதிகாரி, கேத்தரின் ஸ்மால்வுட்," துரதிர்ஷ்டவசமாக, பூகம்பங்களில் நாம் எப்போதும் ஒரே விஷயத்தைப் பார்க்கிறோம். அதாவது இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்ப நிலையை காட்டிலும் அடுத்த வாரத்தில் கணிசமாக அதிகரிக்கும். பனிப்பொழிவு மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது" என்றார்.

Turkey Earthquake death toll may increase 8 times says UN

Images are subject to © copyright to their respective owners.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் வரும் நாட்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றார். அதேபோல, சிரியாவிலும் இந்த பூகம்பத்தினால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கேத்தரின் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் இதுவரை 3,419 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு துணை அதிபர் ஃபாத் ஆக்டே தெரிவித்திருந்த நிலையில் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஐநா தெரிவித்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | வியாழக்கிழமை மேட்ச்.. சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்த இந்திய கிரிக்கெட் வீரர்.. IND vs AUS

Tags : #TURKEY EARTHQUAKE #UN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Turkey Earthquake death toll may increase 8 times says UN | World News.