VIDEO: சொல்லிட்டே இருக்கேன், எனக்கே 'தடுப்பூசி' போட பாக்றியா...? 'வாக்சின் போடாமல் இருக்க பாட்டி செய்த காரியம்...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாமிக்கே கொரோனா ஊசியா என பாட்டி ஒருவர் செவிலியர்கள் முன் சாமியாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் அடங்காத நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராடி வருகின்றனர். ஆனால் இன்றளவும் இது குறித்து அறியாமையில் சிலர் இருக்க தான் செய்கின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் புதுச்சேரியில் பாட்டி ஒருவர் கொரோனா ஊசி போடக்கூடாது என சாமியாடிய சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியில் மக்கள் அனைவரும் 100% கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை செவிலியர், ஆஷா பணியாளர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தட்சிணாமூர்த்தி நகரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதியின் வீட்டுக்கும் சென்றுள்ளனர்.
அங்கு இருந்த முதியவர்கள் எங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாட்டோம் என கையெடுத்து கும்பிட்டுள்ளனர். செவிலியர்கள் கொரோனா வைரஸ் ஆபத்து குறித்து என்ன தான் சொன்னாலும் அந்த முதியவர்கள் தொடர்ந்து வேண்டாம், வேண்டாம் போங்கள் என்றும் விரட்டியுள்ளனர்.
சிறிது நேரம் ஆனா பின்பு வீட்டின் உள்ளே நின்று பேசிகொண்டிருந்த பாட்டி சாமி வந்து 'மாரியம்மா, அங்காளம்மா ஆகாதுன்னு சொல்றேன் எனக்கே ஊசி போட வரியா?' என கத்தியுள்ளார். அதோடு, செவிலியர்கள் அங்கிருந்து செல்லும் வரை அந்த பாட்டி சாமியாடியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து சுகாதரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நாங்கள் மக்கள் பணிக்காக எங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறோம். ஆனால் இதுவரை பலருக்கு கொரோனா குறித்து புரிதல் இல்லை என்பது கஷ்டமான விஷயம். இதற்குள் அடுத்து, ஒமிக்ரான் வந்தால் புதுச்சேரியை காப்பாற்றுவது கடினமாகிவிடும்' என தெரிவித்தனர்.