'இறுதிச்சடங்கு' கூட செய்ய முடியாமல் 'சிகிச்சையில்' குடும்பத்தினர்... 'திடீரென' அதிகரித்துள்ள உயிரிழப்பால்... 'கலங்கி' நிற்கும் நகரம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 24, 2020 12:52 AM

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டு வருகிறது.

Brazil Manaus Coronavirus Victims Buried In Mass Graves

பிரேசிலில் உள்ள மனாஸ் நகரத்தில் கொரோனா பாதிப்பால் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இங்கு சராசரியாக 30 பேர் வரை உயிரிழந்து வந்த நிலையில் தற்போது கொரோனாவால் அதிகரித்துள்ள உயிரிழப்புகள் காரணமாக உடல்களை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தினரும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துயரமான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து உயிரிழந்தவர்களுடைய உடல்களை உடனுக்குடன் புதைக்க நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் உடல்களை தனித்தனி சவப்பெட்டிகளில் வைத்து, ஒரே இடத்தில் ஜேசிபி மூலம் பெரிய பள்ளம் தோண்டி அவற்றை புதைத்து வருகின்றனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறிந்து அங்கு வரும் சில உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். அவர்களைத் தவிர உயிரிழந்த பலருடைய உடல்களும் இறுதிச்சடங்குகள் செய்யப்படாமலேயே புதைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.