போர்க்கப்பல்களை 'இடித்து' தரைமட்டமாக்கி விடுவோம்... 'அமெரிக்காவுக்கு' பகிரங்க எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 24, 2020 01:42 AM

எங்களை தேவையில்லாமல் சீண்டினால் போர்க்கப்பல்களை இடித்து தரைமட்டமாக்கி விடுவோம் என அமெரிக்காவுக்கு, ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

\'Will be destroyed warships in Gulf\' Iran Warns US

ஈரான் மீது பொருளாதாரத்தடை விதித்திருக்கும் அமெரிக்கா இந்த கொரோனா நேரத்திலும் ஈரானை படாதபாடு படுத்தி வருகிறது. நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப்,'' ஈரானிய கப்பல்களை நடுக்கடலில் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டுள்ளேன்,'' என தெரிவித்து இருந்தார். பதிலுக்கு ஈரான் தற்போது பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரானின் புரட்சிகர காவலாளிப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹூசைன் சலாமி, '' அமெரிக்கா எங்களை சீண்டினால் வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் இடித்து தரைமட்டமாக்கப்படும். எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையாற்றுவோம். அவர்களுக்கு எங்களின் வலிமை பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள்,'' என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கொரோனாவுக்கு மத்தியிலும் இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்ந்து போர்ச்சூழலை நோக்கி நகர்வது ஆபத்தான போக்காக பார்க்கப்படுகிறது.