"ஒளிஞ்சிருக்குற லட்சணம் அப்படி!".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 23, 2020 11:08 PM

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஆங்காங்கே மக்கள் தேவையின்றி வெளிவரவும் செய்கின்றனர். 

Police uses drone cameras to teach peoples lockdwon

எனினும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும், அதுவும் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டும் வெளிவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளையும் மீறி வெளியில் தேவையின்றி நடமாடும் கிராமத்துக்காரர்களையும் ட்ரோனை பறக்கவிட்டு அலறவிடுகிறார்கள் நம் போலீஸார். 

அப்படி வேலூர் மாவட்ட காவல்துறையினர் ட்ரோன் கேமராவின் மூலம் விரட்டியதில், கிரிக்கெட் விளையாண்டுகொண்டிருந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனும், அதில் ஒருவர் வாலிபால் கம்பத்திலும், இன்னும் இரண்டு பாயும் புலிகள் இருசக்கர வாகனத்தின் அடியில் பதுங்கினர், இன்னும் சிலர் இடர்பாடான சுவரிடையே சென்று இடுக்கில் சிக்கிக் கொண்டனர். சிலர் காம்பவுண்டு சுவரை தாண்டிக் குதித்தனர். 

இதேபோல் புதுக்கோட்டையிலும், திருவிடை மருதூரிலும் உள்ளூர் ஆட்டக்காரர்களை ட்ரோன் மூலம் கண்காணித்து வீட்டிலிருக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.