பாகிஸ்தானுடன் கூட்டு!.. தாலிபான்கள் போட்டுள்ள 'பகீர்' திட்டம்!.. திணறும் ஆப்கான் அரசு!.. திடுக்கிடும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றுவதற்காக தாலிபான்கள் தீட்டியுள்ள திட்டம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வெற்றிபெற்று வருகின்றனர். ஆப்கான் படைகளை வீழ்த்தி தினமும் பல்வேறு முக்கிய மாவட்டங்களை, நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றி வருகிறார்கள். தாலிபான்கள் கணக்குப்படி இதுவரை 85 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் பகுதிகளை தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.
தாலிபான்களின் படை முக்கியாமாக ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இருக்கும் ஆப்கான் எல்லைகளையும் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. ஆப்கான் அரசு படைகளும் வேகமாக தாலிபான்களிடம் சரண்டர் ஆகி வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 5 மாகாண தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. மத்திய ஆசியா மற்றும் ஈரானில் இருந்து அதிபர் அஷ்ரப் கனியின் அரசுக்கு கிடைத்து வரும் வர்த்தக வருவாய் மற்றும் இதர சப்ளைகளை துண்டிக்கும் நோக்கத்துடன் அவர்கள் முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய எல்லை சாவடிகளை தாலிபன்கள் கைப்பற்றி உள்ளதால் சுங்க வருவாயில் சுமார் 60 சதவிகிதம் அவர்களின் கைகளுக்கு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், பாகிஸ்தான் வழங்கும் ஆயுதங்கள் மற்றும் இதர உதவிகளை வைத்துக் கொண்டு, தலைநகர் காபூலை பிடிக்கும் திட்டத்துடன் தாலிபான்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்
