VIDEO: வண்டி 'ஆப்கான் பார்டர்'ல நுழைஞ்சதுமே... 'அங்க நின்னுட்ருந்த தாலிபான்கள் எல்லாரும் கூட்டமா வந்து வழி மறிச்சு...' - 'அதிர' வைக்கும் 'வைரல்' வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் செய்துள்ள காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

20 வருடங்கள் கழித்து தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளது. தற்போது தற்காலிக அரசை அமைத்து வரும் தாலிபான்களுக்கு நட்பு நாடாக திகழ்ந்து வருவது பாகிஸ்தான்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த உள்நாட்டு போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். அவ்வாறு இருக்கும் ஆப்கான் மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 17 சரக்கு லாரிகள் ஆப்கானுக்குள் வந்துள்ளன.
ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த தாலிபான் படையினர் சிலர், பாகிஸ்தானில் இருந்து வந்த நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை மறித்து கொடிகளை அகற்றி உள்ளனர்.
பாகிஸ்தான் தேசிய கொடிகளை அகற்றியத்தோடு மட்டுமல்லாமல் கொடிகளை கிழித்தும் உள்ளனர். மேலும் அங்கிருந்த தாலிபான் பாதுகாவலர்கள் மற்றும் பொது மக்கள் பாகிஸ்தான் கொடியை எரிக்க வேண்டும் என சொல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தாலிபான் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன் அந்த அமைப்பிற்கு முழு துணையாக இருந்த பாகிஸ்தானுக்கே இது தான் கதி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Taliban foot soldiers in this video removing Pakistan's flags from trucks carrying aid supplies for Afghanistan #Taliban pic.twitter.com/YelHBHxNYL
— Murtaza Ali Shah (@MurtazaViews) September 21, 2021

மற்ற செய்திகள்
