“கடவுளே...! அந்த அப்பாவி மக்களுக்கு 'இப்படியா' நடக்கணும்...?” தரையிறங்கிய விமானத்தில் கண்ட 'நடுநடுங்க' வைக்கும் காட்சி...! - இந்த உலகம் எங்க போய்கிட்டு இருக்கு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆப்கானை தாலிபான் அமைப்பு கைப்பற்றிய நிலையில் அங்கிருக்கும் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற தவியாய் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விமானங்கள் மூலம் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.
இவ்வாறு ஆப்கானை விட்டு வெளியேறிய மக்கள் அமெரிக்க விமானப்படை விமானத்தில் இருக்கும் சக்கரங்களில் உட்கார்ந்து சென்றாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என ஆப்கான் மக்கள் பல சாகசங்களை புரிந்தனர்.
அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தனர். அந்த வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த உலகத்தையே நிலைகுலைய செய்தது.
இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் மனிதநேயத்தையே கேள்வி எழுப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும். அதோடு, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
