ராணி எலிசபெத்-க்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த இருவர்.. 14 மணி நேரத்துல லவ்வர்ஸ் ஆகிட்டாங்களா..? ஒரே நாளில் வைரல் ஆன டாப்பிக்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 20, 2022 02:17 PM

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

Strangers who met in queue to see queen lying in state became friends

Also Read | ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் கார்.. "அட, இதுக்கு பின்னாடி இப்டி ஒரு சம்பவம் இருக்கா??"

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, இத்தனை நாட்கள் அரசு மரியாதை படி, ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நபர்கள் இடையே நடந்த நிகழ்வு தொடர்பான செய்தி, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Strangers who met in queue to see queen lying in state became friends

ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் பலரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த நிலையில், Jack Ciuro மற்றும் Zoe ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட நட்பு தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

முன்பின் தெரியாத ஜாக் மற்றும் ஜோ ஆகிய இருவரும் சுமார் ஐந்து மைல் தூரத்திற்கு ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்துள்ளனர். ஏறக்குறைய 14 மணி நேரம் வரிசையில் காத்திருந்த அவர்கள், ஒரு நிமிடம் கூட துவண்டு போகாமல் முழுக்க முழுக்க அரட்டை அடித்த படி, மிகவும் வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இருவருக்கும் இடையே நிறைய பொதுவான விஷயங்கள் ஒத்து போவதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

Strangers who met in queue to see queen lying in state became friends

இது தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், பலரும் இவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், நல்ல நண்பர்களாக மாறிய ஜாக் மற்றும் ஜோ ஆகிய இருவருக்குமே ஏற்கனவே பார்ட்னர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போகும் ஜோ, ஜாக்கை தனது திருமணத்திற்காக அழைத்துள்ளார்.

ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்து இனி வரும் காலங்களில் நண்பர்களாக இருக்க போவதாக அறிவித்துள்ள அவர்கள், தங்களுக்கு இடையே காதல் உருவானதாக வரும் கருத்துக்களை பார்த்து அதனை மிகவும் வேடிக்கையாக அவர்கள் எதிர் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | இதுவரை யாரும் கண்டிராத ராணி எலிசபெத் புகைப்படம்.. பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு!!

Tags : #QUEEN ELIZABETH #STRANGERS #ராணி எலிசபெத் #QUEEN ELIZABETH II FUNERAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Strangers who met in queue to see queen lying in state became friends | World News.