ஓடுறா.ஓடுறா டிராகுலா வந்துடுச்சு.. பீச்-ல கரையொதுங்கிய 4 அடி வினோத மீன்.. தெறிச்சு ஓடிய மக்கள்..வைரல் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் டிராகுலா போல உடலமைப்பு கொண்ட வினோத மீன் ஒன்று கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிராகுலா மீன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் வழக்கம்போல மக்கள் தங்களது உடற்பயிற்சிகளை மேற்கொள்ள சென்றிருக்கின்றனர். அப்போது ஒரு நபர் தூரத்தில் ஏதோ நீளமாக கிடப்பதை பார்த்துள்ளார். ஆர்வம் காரணமாக அதன் அருகே நெருங்கியுள்ளார். சுமார் நான்கு அடி நீளத்தில் கிடந்த வினோத மீனை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அவரது அதிர்ச்சிக்கு காரணம் அந்த மீனின் தோற்றம் தான்.
அந்த மீனிற்கு டிராகுலா போல இரண்டு நீளமான கோரை பற்களும், முதுகில் நீளமான துடுப்பு போன்ற பகுதியும் இருந்திருக்கிறது. நான்கு அடி நீளம் இருந்த மீன் அசையவே, உயிர் இருப்பதை அறிந்த அந்த நபர் அதனை உடனடியாக மீண்டும் கடலுக்குள் விட்டிருக்கிறார்.
வெளிவந்த உண்மை
கலிபோர்னியா கடற்கரையில் வினோத மீன் ஒன்று கரையொதுங்கிய சம்பவம் வைரலாக பேசப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விநோத டிராகுலா மீனின் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பரவியிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய முதுகெலும்பு விலங்கியல் அருங்காட்சியகத்தில் இக்தியாலஜி (ichthyology) பிரிவின் கண்காணிப்பாளர் இது லான்செட் மீன் தான் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆழ்கடல் மீன்
நீண்ட மூக்கு கொண்ட லான்செட் மீன், அறிவியல் ரீதியாக அலெபிசாரஸ் ஃபெராக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இவை துருவ பகுதிகள் அல்லாது உலகம் முழுவதிலும் உள்ள பிற கடற்பகுதிகளில் 350 முதல் 6,500 அடி ஆழத்தில் வசிப்பவை.
சூரிய ஒளி குறைவாக இருக்கும் இடங்களில் வாழும் இந்த மீன்கள், அங்குள்ள இருளான பகுதிகளில் பதுங்கி இரைகளை வேட்டையாடும் திறமை கொண்டவை என்கிறார்கள் நிபுணர்கள். கலிபோர்னியாவில் கரையொதுங்கிய இந்த வினோத மீனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Also Read | அந்தமாதிரி படத்தில் நடித்ததாக மனைவி மீது சந்தேகம்.. நள்ளிரவில் கணவன் செய்த விபரீதம்..