ஹோட்டலின் 'கார்' பார்க்கிங் பகுதியில்,,.. 'லேப்டாப்', புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்த 'சிறுமி'கள்,,.. காரணம் தெரிந்து தேடி வந்த 'உதவி',,.. நெகிழ்ச்சி 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் இலவச வைஃபையை பயன்படுத்தி இரண்டு சிறுமிகள் அந்த உணவகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் உட்கார்ந்து பாடம் படித்து வந்தனர்.

இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஒருவர் வெளியிட, இணையத்தில் வெளியாகி அதிகம் வைரலானது. தொடர்ந்து, அந்த சிறுமிகளுக்கு வேண்டி 1,40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி) வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. சிறுமிகள் கல்வி கற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட நபர், 'எனது தாய் இந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். பாடம் கற்க வேண்டி உணவகத்தின் இலவச வைஃபையை இரண்டு சிறுமிகள் பயன்படுத்தி வந்தனர். நம்மில் பலருக்கு சிறந்த இன்டர்நெட் வசதி இருப்பதால், வீட்டிலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்து விடுகிறோம். ஆனால், இது போன்று பல பள்ளி மாணவர்களுக்கு இலவச வைஃபை கிடைக்க வேண்டிய சமயம் இது. நாம் அனைவரும் உதவ முன்வர வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
சில மணி நேரங்களிலேயே, இந்த பதிவு அதிகம் வைரலான நிலையில், அந்த சிறுமிகளின் வீட்டிலேயே இலவச இணைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல, அவர்களின் கல்வி உதவிக்கு வேண்டியும் நிதி திரட்டப்பட்டது.

மற்ற செய்திகள்
