'உடலுறவின் போது திருட்டுத்தனமாக நடக்கும் செயல்'... 'அதிரடியாக சட்டம் கொண்டு வரும் மாகாணம்'.. இழப்பீடு கூட கேட்கலாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த புதிய மசோதா மூலம், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குத் தொடுப்பதோடு அதற்கான இழப்பீட்டையும் பெற முடியும்.
அமெரிக்காவில் உள்ள மாகாணமாக கலிபோர்னியாவில் உடலுறவு கொள்ளும் போது ஒருவரது சம்மதம் இல்லாமல் ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்துக்குச் சமம் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. AB 453 என்ற இந்த புதிய மசோதா வந்தால் அனுமதியின்றி, சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகிச் சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும் உணர்ச்சி ரீதியான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்க முடியும்.
ஆணுறையை அகற்றும் விவகாரத்தைச் சட்ட ரீதியாகத் தடுப்பதில் நான் பணியாற்றி வரும் ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியா, கூறுகையில் ''இத்தகையச் செயலைச் செய்பவர்களை தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பாக்கும் வரை நான் ஓயப்போவதில்லை. ஆன்லைன் சமூக ஊடகங்களில் இன்னொருவருக்குத் தெரியாமல் எப்படி ஆணுறையை உடலுறவின் போது அகற்றுவது என்பது குறித்த ஆலோசனைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவதை ஊக்குவிக்க முடியாது. ஆனால் சட்டத்தில் இது ஒரு குற்றம் என்பதாக இதுவரை எதுவும் இல்லை'' எனக் கடுமையாகக் கூறியுள்ளார். இதற்கிடையே இத்தகைய திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றும் செயல் பற்றி 2018-ல் ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் செக்ஷுவல் ஹெல்த் செண்டர், ''மூன்றில் ஒரு பெண்ணும் ஐந்தில் ஒரு ஆணும் உடலுறவின் போது'' இதுபோன்று தாங்கள் ஏமாற்றப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் இத்தகைய செயல்களுக்கு கலிபோர்னியாவில் முடிவு கட்டப்பட்டுள்ளது. இத்தகைய செயலை நாம் எளிதாகக் கடந்து விடக் கூடாது எனக் கூறும் சமூக ஆர்வலர்கள், இதைப் பாலின உரிமை மீறல் ஆகவும் கற்பழிப்பாகவும் பார்க்க வேண்டும், வன்முறையாகக் கருத வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்த செயலுக்கு எதிரான குரல்கள் பல வெளிநாடுகளில் தற்போது எழுந்து வருகின்றன.
இப்படி திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றுவதால் பெண் கருத்தரிப்பது நடந்து விடும் என்ற அச்சத்தைத் தவிரவும், பாலியல் உறவு உடன்படிக்கையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது. இதைப் பாலியல் ரீதியான தாக்குதல் என்றே பார்க்க வேண்டும் என்று அங்குப் பெண்கள் தரப்பிலிருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்தான் கலிபோர்னியா முன்னோடியாகத் திருட்டுத்தன ஆணுறை அகற்றச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளது.