'உலகம் எது நடக்க கூடாதுன்னு நினைச்சுதோ அது நடந்து போச்சு'... '300 பேர் போக கூடிய விமானத்தில்'... அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் மக்களின் நிலையைப் பார்த்து இன்று உலகமே கண்ணீர் வடிகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தாலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தாலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த நிலையில் அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்கத் தாலிபான்களின் தீவிரவாத அமைப்பின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
இதன்காரணமாக நாட்டின் பிரதான விமான நிலையம் அமைந்துள்ள தலைநகர் காபூலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லை எனவும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே விமான நிலையத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டின் தூதரகம் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே 300 பேர்கள் மட்டுமே பயணிக்கப் பயன்படுத்தப்படும் விமானத்தில் சுமார் ஆயிரம் பேர்கள் புறப்பட முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இனி பயணிகள் விமானங்கள் அனைத்தும் காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட வாய்ப்பில்லை என்றும், ராணுவ ஹெலிகொப்டர் மட்டுமே பயன்படுத்தப்படும் என அங்கிருந்தும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் காட்சிகள் காண்போரைப் பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது. மனிதக் குலம் பெரும் ஆபத்தில் இருப்பதாக உலக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
This is, perhaps, one of the saddest images I've seen from #Afghanistan. A people who are desperate and abandoned. No aid agencies, no UN, no government. Nothing. pic.twitter.com/LCeDEOR3lR
— Nicola Careem (@NicolaCareem) August 16, 2021
“Wake! For the sun, who scatter'd into flight
The stars before him from the field of night
Drives night along with them from Heav'n & strikes
The Sultan's turret with a shaft of light”
Sunrises on thousands of people stranded at Kabul airport #Afghanistan pic.twitter.com/klJnODvzR8
— Stefan Simanowitz (@StefSimanowitz) August 16, 2021
Footage via former @nytimes journalist, @JawadSukhanyar, shows crowd at #Kabul's Hamid Karzai Intn’l Airport rushing towards the terminal this morning amid the sound of automatic gunfire. Terrifying! #Afghanistan #Taliban #kabulairport #AfghanistanBurning pic.twitter.com/GtEkyJPooM
— Stefan Simanowitz (@StefSimanowitz) August 16, 2021
The image of people in Afghanistan running and surrounding this plane on the tarmac in Kabul is powerful.
So powerful, it brought back a childhood memory so intense I had to go look it up to see if it was real.
It was. I’ll post in the next tweet.
— Leah McElrath 🏳️🌈 (@leahmcelrath) August 16, 2021