"கொறைஞ்சுருச்சு! ஏன்னா எங்க கட்டுப்பாட்டு சிஸ்டம் அப்படி!".. லாக்டவுனை கலைத்த முதல் ஐரோப்பிய நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 15, 2020 09:11 PM

மத்திய ஐரோப்பாவில் உள்ளது ஸ்லோவேனியா. இங்குள்ள மலைகள், ஸ்கை ரிசார்ட்கள் மற்றும் ஏரிகள் உலக அளவில் மிக புகழ் பெற்றவை. மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவேனியாவின் தலைநகரம் லுப்லஜானா. தற்போது ஸ்லோவேனியாவில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படாத காரணத்தால், தன்னுடைய எல்லைகளை திறந்துள்ளது ஸ்லோவேனியா.

Slovenia is the first country to call an end to covid19 lockdown

கொரோனா நோய்  பரவலை மிக சிறந்த முறையில் ஸ்லோவேனியா கையாண்டதால் ஒரு நோய் தொற்றுகூட புதிதாக ஏற்படவில்லை என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே இன்று தனது எல்லைகளை திறந்துள்ளது ஸ்லோவேனியா. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜானெஸ் ஜான்சா பேசியபோது, ஐரோப்பியா நாடான ஸ்லோவேனியாவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான அமைப்பு மிகச் சிறப்பாக இருந்ததால், சமூகத் தொற்றை விரைவாகத் தடுக்க அது தங்களுக்கு உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்திகள் வெளியாகிய 2 மாதங்களுக்கு பிறகு இந்தத் தகவலை அவர் பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலைநாடான ஸ்லோவேனியா இத்தாலியின் எல்லையில் உள்ளது. சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் சுமார் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 103 பேர் இறந்துள்ளனர்.  எனினும் புதிய தொற்றுகள் கண்டறியப்படாததால், தமது எல்லைகளைத் திறக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.