BREAKING: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்.. "வார்த்தைகளில் விவரிக்க முடியாத சோகம்".. பிரதமர் மோடி உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணமடைந்ததாக அந்நாடு அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
Also Read | "ஏதோ உலகத்துக்கு என்னால முடிஞ்ச உதவி".. இரட்டை குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க் போட்ட வைரல் ட்வீட்....!
அதிர்ச்சி
ஜப்பானின் நாரா பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அபே. அப்போது மர்ம நபர் ஒருவர் சுட்டதில் அபே அங்கேயே சுருண்டு விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபே-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில்,"முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறார்கள். அவர் உயிர் பிழைத்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஷின்சோ அபே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடி இரங்கல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மரணமடைந்த ஷின்சோ அபே-வுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,"எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவால் நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி. ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. அவர் ஜப்பானையும் உலகையும் சிறப்பாக மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
துக்கம்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-யின் மறைவை முன்னிட்டு நாளை நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறித்திருக்கிறார். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் மிக இளம் வயதில் பிரதமர் ஆனவர் என்ற பெருமையை கொண்ட அபே, ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அபே அறிவித்தார். பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு இருந்த நிலையில் உடல்நிலை காரணமாக பதவியை துறப்பதாக அறிவித்தார் அபே.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணமடைந்தது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உலக தலைவர்கள் சமூக வலை தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.