VIDEO: கொரோனா ரொம்ப ‘கொடிய’ வைரஸ்-னு ஆரம்பத்துலேயே தெரியும்.. சீனாதான் எங்களை ‘பொய்’ சொல்ல சொன்னது.. ‘பகீர்’ தகவலை வெளியிட்ட அதிகாரி..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா கொடிய வைரஸ் என்பது முன்னாடியே தெரியும் என்றும், இதை வெளியே சொல்லக்கூடாது என சீன அதிகாரிகள் கூறியதாகவும் அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 96 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் வுகான் ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‘2019-ம் ஆண்டு வுகானில் உள்ள வைரஸ் ஆய்வு நிலையத்தில் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. இது பெரும் கொடிய தொற்றுநோய் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும். ஆனால் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று எங்களை சீன அதிகாரிகள் தடுத்தார்கள்.
இங்கே அப்படி எந்தவொரு தொற்று நோயும் இல்லை என்று எங்களை பொய் சொல்ல சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்புக்கு தவறான தகவலை கொடுத்து சீன அரசு ஏமாற்றியது.
இது வுகானிலேயே முடிவடைந்து விடும் என்று சீன அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராமல் இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவி விட்டது’ என ஆய்வு கூடத்தில் வேலை பார்க்கும் முக்கிய அதிகாரி ஒருவர் தனது முகத்தை மறைத்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
News Credits: DailyMail

மற்ற செய்திகள்
