ஆசிரியர்களுக்கு 'சம்பளம்' பாதியாக குறைக்கப்படுகிறதா...? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கொடுத்த பதில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கமுடியாத நிலையுள்ளது. அதோடு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்திவருகின்றனர்.
ஒரு சில பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பாடம் கற்பதற்கு தேவையான ஸ்மார்ட் போன், ஆன்லைன் வசதிகள் இல்லாததால் ஆசிரியர்கள் டிவி மூலமும் பாடம் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால் அதன்பிறகு கொரோனாவால் சில மாணவர்கள், ஆசியர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர இதர மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்தாலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதில்லை. அதோடு பொதுதேர்வு எழுதவிருக்கும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. அதுதவிர இதர வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவது இல்லை. ஆனால், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முழு சம்பளமும் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்போது பிரச்சனை என்னவென்றால் பொதுவாகவே முன்களப் பணியாளர்களின் சம்பவம் பிற பதவிகளை குறைவாக இருக்கும். அப்படியிருந்தும் ஒரு சில இடங்களில் முன்களப்பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் முன்கள அரசு ஊழியர்களை தவிர இதர அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்து வருகின்றன.
இன்று, திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை, சத்திரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ், 'ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல்கள் வருகின்றன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய முடிவெடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.