'டிவி.. ஃபிரிட்ஜ்... வாஷிங் மெஷின்... செல்ஃபோன்'... என அனைத்திலும் வெற்றி!.. சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ சாதித்தது எப்படி?.. மறைந்தும் இறவா புகழ்!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் குழுமத்தின் தலைவரான லீ குன்-ஹீ இன்று காலமானார். இவர் ஆறு வருடங்களாக மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
78 வயதாகும் லீ, தனது தந்தை லீ பியுங்-சல்லின் நூடுல் வர்த்தக வணிகத்தை 375 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட ஒரு பரந்த அதிகார மையமாக வளர்க்க உதவினார்.
மின்னணு மற்றும் காப்பீட்டு துறையிலிருந்து, கப்பல் கட்டுமானம் மற்றும் கட்டுமானம் வரை டஜன் கணக்கான துணை நிறுவனங்கள் சாம்சங் நிறுவனத்திடம் உள்ளன.
தென் கொரியாவின் கண்கவர் உயர்வு மற்றும் தென் கொரியா உலகமயமாக்கலை எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதன் அடையாளம் லீ. அவரது மரணம் பல கொரியர்களால் நினைவுகூரப்படும் என்று கார்ப்பரேட் ஆராய்ச்சியாளர் நிறுவனமான சேபுல்.காமின் தலைமை நிர்வாக அதிகாரி சுங் சன் சுப் கூறியுள்ளார்.
ஃபோர்ப்ஸின் தகவல்களின்படி, தென் கொரியாவின் மிகப் பெரிய பணக்காரரான லீயின் சொத்துமதிப்பு 20.9 பில்லியன் டாலர் ஆகும். சாம்சங் குழுமத்தின் கிரீட நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக சாம்சங் லைஃப் உள்ளது, மேலும் காப்பீட்டு நிறுவனத்தில் 20.76% பங்கு லீக்கு சொந்தமானது.
"தலைவர் லீ ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவர் சாம்சங்கை ஒரு உள்ளூர் வணிகத்திலிருந்து உலக முன்னணி கண்டுபிடிப்பாளராகவும், தொழில்துறை சக்தியாகவும் மாற்றினார். 1993-ஆம் ஆண்டு 'புதிய மேலாண்மை' என்ற அவரது அறிவிப்பு சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான நிறுவனத்தின் பார்வையை ஊக்குவித்தது" என்று சாம்சங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லீயின் வாழ்நாளில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய டிவி தயாரிப்பாளராக உயர்ந்தது. அதுபோல செல்போன் தயாரிப்பில் நோக்கியா ம்ற்றும் ஆப்பிள் செல்போன்களை விஞ்சி உலகின் முதலிடத்திற்கு சாம்சங் நிறுவனம் வந்தது.