தென் கொரியாவில் பரபரப்பு!.. தடுப்பூசி போடப்பட்ட 25 பேர் மரணம்!.. அடுத்தடுத்த திருப்பங்களால்... மருத்துவர்கள் 'அதிரடி' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்கொரியாவில் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் பரிதாபமாக மரணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவில் பருவ காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். இந்த விவகாரம் அங்கு பெரும் சோகத்தையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தென்கொரிய அரசு அதிகாரிகள் கூறும்போது, 'தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்ததாக கூறப்படுகிற 9 சந்தேக மரணங்கள் குறித்து விசாரித்தோம்.
அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும், உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிர ஒவ்வாமை எதிர்வினையால் இறப்பு நேர்ந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை' என தெரிவித்தனர்.
பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் உள்ளூர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை எனவும், ஒரே ஒரு பிரான்ஸ் நிறுவனம் மட்டும் தென் கொரியாவுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில் மரணமடைந்த 25 பேர்களில் நால்வருக்கு மட்டுமே பிரான்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு உள்ளூர் நிறுவனங்களும் தங்கள் கருத்தை வெளியிட மறுத்துள்ளது.
காய்ச்சலுக்கான தடுப்பூசியை வழங்கிவந்த இந்த 5 நிறுவனங்களும் மொத்தமுள்ள 5.2 கோடி மக்கள் தொகையில் 3 கோடி மக்களுக்கும் இலவசமாகவும் கட்டணத்திற்கும் தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது.
மேலும், அக்டோபர் 13 முதல் சுமார் 83 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 350 பேர்களுக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்படவே, அவர்களை கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், எஞ்சிய பேர்களுக்கு தடுப்பூசி போடுவதை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
