ஏம்பா எங்க நாட்டை தாக்குறீங்கன்னு கேட்டதுக்கு.. ரஷ்ய வீரர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா..? உக்ரைன் அதிபர் சொன்ன பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனில் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் கூறிய பதில் அதிர்ச்சியளிப்பதாக அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் 8-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணகான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சுமூக முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இதனை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனென்றால் தாய்நாட்டை காக்க லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள், ராணுவத்தினருடன் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். மக்களின் இந்த எழுச்சியை ரஷ்யா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
உக்ரேனிய மக்களின் வீரத்தை பார்த்து ரஷ்ய படையினர் பல இடங்களில் இருந்து பின்வாங்கி வருவதாக செய்திகள் வருகின்றன. பல பகுதிகளில் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடம் ஏன் உக்ரைனுக்குள் வந்தீர்கள் எனக் கேட்டால், ‘எங்களுக்கு தெரியாது’ எனக் கூறுகின்றனர். குறிக்கோள் இல்லாமல் உக்ரைனுக்குள் ஊடுருவியிருக்கும் ரஷ்ய வீரர்களால் என்ன சாதித்துவிட முடியும்? அவர்கள் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், உக்ரைனுக்குள் நுழைந்தால் அழிக்கப்படுவார்கள் என விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
