உக்ரைன் கூட போர் பதற்றம் இருக்கும்போது ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. பரபரப்பில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இதனிடையே உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தெரிவித்தது. ஆனால் பெலராஸ் நாட்டு படைகளுடன் இணைந்து ரஷ்யா தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக ரஷ்யா நேற்று உக்ரைன் எல்லையில் அணு ஆயுத தளவாடங்களுடன் போர் பயிற்சியை நடத்தியது.
இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் ஊடுருவ முயன்றதாக 5 உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களை சுட்டுக்கொன்றதாக ரஷ்ய ரணுவம் அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.