அச்சோ! ஐரோப்பாவின் ராட்சத அணு உலையில் குண்டு வீசிய ரஷ்யா.. "செர்னோபில்-ல விட 10 மடங்கு".. எச்சரிக்கும் உக்ரைன்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை எதிர்த்துவந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து பெலாரஸ் எல்லையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து ஆறு பகுதிகளில் இருந்தும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றன. இதன் காரணமாக Zaporizhzhia அணுமின் நிலையத்தின் பவர் யூனிட் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே டஸ் தெரிவித்து இருக்கிறார்.
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள தொழில் நகரமான Zaporizhzhia இல் உள்ள இந்த அணுமின் நிலையம், உக்ரைன் நாட்டின் அணுசக்தியில் 40 சதவீதத்தை வழங்குகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திவிடும் என குலேபா எச்சரித்து இருக்கிறார்.
இதுகுறித்து குலேபா வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,"இந்த அணுமின் நிலையம் வெடித்தால், அது சோர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும். ரஷ்யர்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும், தீயணைப்பு வீரர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும், பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்யா தாக்கி இருப்பதால் அங்கே தீ விபத்து ஏற்பட்டு இருப்பது உலக அளவில் பலரையும் திடுக்கிட வைத்து இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே நேற்று நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்ற ரஷ்யா அனுமதித்திருந்த நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள்-ன்னு இதையா.. வித்திட்டு இருக்காங்க?.. சென்னை போலீசிடம் வசமாக சிக்கிய 4 பேர்..!

மற்ற செய்திகள்
