"8 கோடி பேர் யூஸ் பண்றாங்க.. ரஷ்யா எடுத்த முடிவு அதிர்ச்சியா இருக்கு".. இன்ஸ்டாகிராம் தலைவர் சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவதாக இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்து இருக்கிறது ரஷ்யா. இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இன்ஸ்டாகிராம் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

"என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
போரும் விளைவும்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் மக்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து கடுமையான பதிவுகளை உக்ரைன் மக்கள் வெளியிட்டனர்.
வழக்கமாக இதுபோன்ற பதிவுகளை ‘வெறுப்புவாதம்’ எனக் குறிப்பிட்டு அதனை முடக்கும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உக்ரைன் விஷயத்தில் அதைச் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த ரஷ்ய அதிகாரிகள் மெட்டா -விடம் கிரிமினல் விசாரணையை துவங்கி உள்ளனர். அதே நேரத்தில் மெட்டா நிறுவனத்தினை தீவிரவாத அமைப்பாக (extremist organisation) அறிவிக்கக்கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
தடை
இந்நிலையில், ரஷ்யாவில் ஞாயிற்றுக் கிழமை முதல் இன்ஸ்டாகிராம் செயலி இயங்காது எனவும் மக்கள் அதில் பதிவிட்ட தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ரஷ்ய அரசு பொதுமக்களிடம் கடந்த வாரம் தெரிவித்தது.
ரஷ்யாவில் சுமார் 8 கோடி மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகப்படுத்தி வந்தனர். சமீபத்தில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக்கையும் ரஷ்ய அரசு தடை செய்தது. ரஷ்ய மக்கள் உள்நாட்டு சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு தெரிவித்து வருகிறது.
அதிர்ச்சி
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மோசேரி இது பற்றி பேசுகையில், "திங்கள் முதல் ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் செயல்படாது. இதனை 8 கோடி பேர் ரஷ்யாவில் பயன்படுத்துகிறார்கள். ரஷ்யாவுக்கு வெளியேவும் அந்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். ரஷ்ய அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.
உலகின் முன்னணி சமூக வலைத் தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு ரஷ்யா தடை விதித்து இருப்பது உலகமெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சரிவு
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிற்கு ரஷ்யா தடை விதித்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 3.89 சதவீதம் சரிந்து 187.61 டாலருக்கு வர்த்தகம் ஆனது. கடந்த பிப்ரவரி முதலே இந்த அந்நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
