கொரோனா குறையுது சாமி.. ஆனா வேற ஒன்னு இருக்கு! எச்சரிக்கும் பில்கேட்ஸ்.. என்ன சொல்றாப்ல?
முகப்பு > செய்திகள் > உலகம்2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகை மிரளவைத்தது கொரோனா. உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸ்..
சில நாட்கள் அச்சுறுத்தி, உயிர் பயம் காட்டிய இந்த கொள்ளை நோய் பலரையும் கொத்து கொத்தாய் காவு வாங்கியது. முதலில் மக்கள் வீட்டை இழுத்து பூட்டிக்கொண்டனர். பின்னர் அரசு நாட்டை இழுத்து பூட்டிக்கொண்டது (லாக்டவுன்). வேலை, வருமானம், வாழ்வாதாரம், பொருளாதாரம், உணவு பஞ்சம், ஊர்விட்டு ஊர் சென்று தஞ்சம் என ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.
Global Pandemic
இப்போது தடுப்பூசி வந்துவிட்ட போதிலும், நிரந்தரமான மருந்தே இல்லாத இந்த நோய்க்கு பூஸ்டர் தடுப்பூசி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் என அனைத்தும் பரிந்துரைக்கப்பட்டு, Pandemic நோயாக கடந்த ஆண்டுகளில் இந்த நோய் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தான் அடுத்து ஒரு Global Pandemic நோய் வர வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரான பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய பாண்டமிக்
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், இதுபற்றி கூறும்போது, “வரவிருக்கும் இந்த புதிய பாண்டமிக் நோய், கொரோனா தொற்றின் மற்றொரு வேரியண்டாக பாதிக்காது. அது pathogen வடிவில் பெருந்தொற்றாக உண்டாகும், கோவிட் தொற்றாலான ஆபத்துகள் குறைந்தாலும், இந்த புதிய தொற்று அச்சுறுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் பெருந்தொற்று..
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் பில்கேட்ஸ் பேசியபோது, “விரைவில் பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது வேறு ஒரு நுண் கிருமியால் உண்டாகும்.” என்று கூறியிருந்தார். அதாவது ஓமைக்ரானை நினைவூட்டும் விஷயங்களையே பில்கேட்ஸ் கூறியதாக பலரும் கூறினர்.
கவனமாக செயல்பட்டால்..
இந்நிலையில் தான், பில்கேட்ஸ் தற்போது, இந்த அடுத்த பெருந்தொற்று, மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட, இந்த சூழலில் நாம் கவனமாக செயல்பட்டால், விரைவில் கண்டறிந்து, பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.