நம்ம எல்லார் வீட்டுக்கும் 'ஓமிக்ரான்' வரப்போகுது...! - பில்கேட்ஸ் பகிர்ந்த 'எச்சரிக்கை' அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தான் விடுமுறையை ரத்து செய்து விட்டதாக தன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. தற்போது வரை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறதே தவிர குறைந்தப்பாடில்லை.
தென் ஆப்பரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இதுவரை சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவிட்டது.
இதனால் பல நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஓமிக்ரான் பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'இதுவரை நாம் பார்த்ததில் எந்த ஒரு வைரஸையும் விட ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் உங்களை எப்படி தாக்குகிறது என்பது பெரிதாக தெரியாது. இது டெல்டாவை விட பாதிப்பு அதிகமாக இல்லை. ஆனாலும் பரவும் தன்மை மிக வேகமாக உள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பினோம். ஆனால், நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் நம் அனைவரின் வீட்டிற்கு வரும்.
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இப்போது அது உள்ளது. இதனால் எனது விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன். இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஓமிக்ரான் மிக விரைவாக கடந்து செல்லும் என்பது தான் அது.
ஒரு நாட்டில் ஓமிக்ரான் புகுந்தால் அது அங்கு கொரோனா அலை 3 மாதங்களுக்கும் குறைவாக நீடிக்கும். நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022 இல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.