மிரட்டும் கொரோனா 2வது அலை!.. தமிழகத்தின் மாஸ்டர் பிளான் 'இது' தான்!.. விரிவான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதை அடுத்து, சுகாதாரத்துறை சார்பாக பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி போடுவதை மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும், தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. நோய்த்தொற்று உறுதியானோருக்குத் தேவையான மருத்துவம் அளிக்கவும், அவர்களுடன் தொடர்பில் உள்ளோருக்குத் தொற்றுள்ளதா எனக் கண்டறிய சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார மையங்கள் தவிர, கொரோனா தடுப்பூசி போடுவதற்கென பிரத்யேக தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிழக அரசு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், "சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மற்ற செய்திகள்
