'பக்கிங்ஹாம்' அரண்மனையில் இருந்து 'திருடப்பட்ட' விலையுயர்ந்த பொருட்கள் .. EBAY தளத்தில் விற்பனைக்கா? சிக்கிய இளவரசியின் 'பணியாளர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அரண்மனையிலிருந்து இரண்டு மதிப்புமிக்க பதக்கங்களை திருடியதாக ராணியின் சேவையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. 37 வயதான Adamo Canto என்கிற அந்த அரண்மனை ஊழியர் மீது தான் இந்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆறு வருடங்களாக பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றி வரும் Adamo Canto திருடிய பதக்கங்களில் ஒன்றை EBay தளத்தில் 350 பவுண்ட்டுக்கு விற்பனை செய்யப் பட்டியலிட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அந்த பதக்கம் ஓய்வுபெற்ற கடற்படை துணை அட்மிரல் Sir Anthony Johnstone-Burt (62) என்பவருக்குச் சொந்தமானது.
இவர் தற்போது ராணியின் மாஸ்டர் ஆஃப் தி ஹவுஸ் பணிகளுக்கு பொறுப்பாக இருக்கிறார். இரண்டாவது பதக்கம் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் Matthew Sykes (65) என்பவருக்கு சொந்தமானது. 2010 வரை இவர் ராயல் ஹவுசில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அரண்மனை மற்றும் அரச குடும்பத்தின் கடையிலிருந்து பிற பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் Adamo Canto மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
இளவரசர் ஹாரியின் படங்கள், பொறிக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் கைவினைப் பொருட்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் Adamo Canto மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
நார்த் யார்க்சின் ஸ்கார்போவைச் சேர்ந்த Adamo Canto மீது குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து இவ்வழக்கு திங்கள்கிழமை முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
