திடீரென கழன்று விழுந்த விமானத்தின் எஞ்சின் மூடி.. ‘இதுதான் காரணமா இருக்கும்’.. அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமானத்தின் என்ஜின் ஓடு பாதையில் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Alliance Air flight takes off without engine cover Alliance Air flight takes off without engine cover](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/photo-alliance-air-flight-takes-off-without-engine-cover.jpg)
விமானம்
மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் (Alliance Air) ஒன்று புறப்பட்டுச் சென்றது. 4 ஆண்டு பழமையான இந்த விமானத்தில் சுமார் 70 பயணிகள் பயணம் செய்தனர். இதனை அடுத்து விமானம் பாதுகாப்பாக புஜ் (Bhuj) நகரில் தரையிறங்கியது.
என்ஜின் கவர்
இதனைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, என்ஜின் கவர் ஓடுபாதையில் கழன்று விழுந்தது. விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் விழுந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேகமாக என்ஜின் கவர் அப்புறப்படுத்தப்பட்டது.
ஆபத்தான அலட்சியம்
பயணிகளுடன் பறந்த விமானத்தில் என்ஜின் கவர் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்த அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றாலும், இது மிகவும் ஆபத்தான அலட்சியம் என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கேப்டன் அமித் சிங்
இதுகுறித்து கூறிய கேப்டன் அமித் சிங், ‘பராமரிப்பு பணிகளுக்குப் பின் விமானத்தை கிளப்புவதற்கு முன் எஞ்சின் கவர் இருப்பதை பணியாளர்கள் உறுதி செய்வார்கள். ஆனால் பணியாளர்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுள்ளனர். மோசமான பராமரிப்புப் பணிகளே இந்தச் சம்பவத்துக்குக் காரணம்’ என அவர் தெரிவித்தார்.
கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)