மொத்தமா சோலிய முடிச்சிட்டாங்க.. செம ஃபார்மில் வடகொரிய ஹேக்கர்கள்! பயனாளர்கள் கடும் அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 17, 2022 12:18 PM

கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் வடகொரிய  ஹேக்கர்கள் சுமார் 40 கோடி டாலருக்கு மேல் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

North Korean hackers steal cryptocurrency worth 400 million dollars

செயினலிசிஸ் நிறுவனம்:

பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினலிசிஸ் (Chainalysis) என்ற நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சைபர் திருட்டு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆச்சரியம் அளிக்கும் விதமாக 'இந்த ஆண்டு கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் குற்றவாளிகளுக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக இருந்தது'.

North Korean hackers steal cryptocurrency worth 400 million dollars

சைபர் திருட்டிலும் வடகொரியா முதல் இடம்:

மேலும், இந்த ஆய்வு அறிக்கை வெளிவந்த உடன் எல்லோருடைய கவனமும் வடகொரியா பக்கம் திரும்பியது. ஏனென்றால், எப்போதும் ஏவுகணை என்று சொன்னால் மட்டுமே வடகொரியா ஞாபகம் வரும் நமக்கு கடந்த ஆண்டு சைபர் திருட்டிலும் வடகொரியா முதல் இடத்திற்கு வந்துள்ளது.

North Korean hackers steal cryptocurrency worth 400 million dollars

மோசடிகளின் எண்ணிக்கை உயர்வு:

மேலும், அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு,

'2020 முதல் 2021 வரை, வட கொரிய-இணைக்கப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஏழாக உயர்ந்ததுள்ளது, மேலும் தற்சமயம் இந்த மோசடிகளின் மதிப்பு 40% அதிகரித்துள்ளது' என செயினலிசிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

North Korean hackers steal cryptocurrency worth 400 million dollars

இந்த கிரிப்டோ ஹேக்கர்கள்  பெரும்பாலும் கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் செண்ட்ரலைஸ்ட் பரிமாற்ற தளங்களை குறிவைத்து கிரிப்டோ சொத்துக்களை திருடுகின்றனர்.

பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெகா திருட்டு:

இந்த கிரிப்டோகரன்சியை திருடும் ஹேக்கர்கள் கவர்ச்சியான மின்னஞ்சல்கள், குறியீடு சுரண்டல்கள் மற்றும் மால்வேர் உள்ளிட்ட பல நுட்பங்களைப் பயன்படுத்தி, நிறுவனங்களின் 'ஹாட்' வாலட்களில் இருந்து நிதியைப் பெற்று, பின்னர் அவற்றை வட கொரியாவின் கட்டுப்பாட்டு முகவரிகளுக்கு மாற்றியுள்ளனர் என்று செயினலிசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

North Korean hackers steal cryptocurrency worth 400 million dollars

இம்மாதிரியான கிரிப்டோ ஹேக்குகளிலிருந்து தப்பிக்க கிரிப்டோகரன்சி பயனாளர்கள் தங்களின் 'கோல்ட் வாலட்டுகளில்' உள்ள கிரிப்டோ முதலீடுகளை 'ஹாட் வாலட்டுகளுக்கு' மாற்றி வைக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் வடகொரியாவோ செயினலிசிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மறுத்ததோடு, நாங்கள் கிரிப்டோகரன்சி ஹேக்குகளில் ஈடுபடுவதில்லை எனவும் வட கொரிய அரசு கூறுகிறது.

Tags : #HACKERS #NORTH KOREAN #CRYPTOCURRENCY #400 MILLION DOLLARS #கிரிப்டோகரன்சி #வடகொரியா #ஹேக்கர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. North Korean hackers steal cryptocurrency worth 400 million dollars | World News.