'என்னங்க சொல்றீங்க...' இந்தியால மட்டும் இவ்ளோ பேரையா...? 'ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்களுக்கு இடியென இறங்கிய செய்தி...' 'ஒருவேளை அதுல நம்ம அக்கவுண்டும் இருக்குமா...' - கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் முகநூல் என்பது இன்று இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் செயலியாக இருக்கிறது.

பல பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த முகநூல் செயலியில் பயனாளர்களின் விவரங்களும் கேட்கப்படுவதுண்டு. அப்படி கேட்கப்படும் சில முக்கிய விவரங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்திருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது.
தகவல்கள் வெளியாகிய எண்ணிக்கையை நினைத்தால் தலையே சுத்துவது போல இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக இஸ்ரேலின் சைபர் கிரைம் உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் என்பவர், பேஸ்புக் பயனாளர்கள் 50 கோடி பேரின் தகவல்கள் ஹேக்கர்கள் இணையதளங்களில் இலவசமாக கிடைப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தகவல் கசிந்த 50 கோடி பேரில், இந்தியாவில் மட்டும் சுமார் 61 லட்சம் பேரின் கணக்கு விவரங்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயனாளர்களின் தகவல்கள் எல்லாம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் கிடைப்பதாக கூறியிருக்கும் அவர் அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்ட் குறித்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்குமா என கலக்கத்தில் உள்ளனர்.
அவர் வெளியிட்ட தகவலில், பேஸ்புக் பயனாளர்களின் முழு பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி, திருமணம் ஆனவரா? இல்லையா என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.
இவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையா என்று ஆலனும், பிசினஸ் இன்சைடர் நிறுவனமும் இணைந்து பரிசோதித்ததில் அவை உண்மையான தகவல் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதிரி சமயங்களில் பேஸ்புக் எப்போதும் மறுக்கும். அதைப்போலவே, இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'தற்போது வெளியாயிருக்கும் தகவல்கள் பழையவை. இவை, 2019-ம் ஆண்டிலேயே கசிந்ததாக கூறப்பட்டு, அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது' என கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
