'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா?!!'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு!!!'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 24, 2020 02:53 PM

இந்தாண்டு ஐபிஎல் தொடரால் பிசிசிஐக்கு நஷ்டம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கங்குலியின் பல அதிரடி முடிவுகளால் பெருமளவு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE

இந்தாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் துவங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேதி அறிவிக்கப்படாமல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்னர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டபோது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் இலங்கையும், ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் நாடுகளில் இந்தாண்டு ஐபிஎல் தொடரை நடத்த வருமாறு அழைத்தன. இதையடுத்து அண்டை நாடான இலங்கையை புறக்கணித்த பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE

குறிப்பாக இந்த இரண்டு நாடுகளில் விமான பயணம் குறைவாக இருக்கும் என்பதாலேயே ஐக்கிய அரபு அமீரகத்தை கங்குலி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னரே அங்கு ஐபிஎல் தொடரில் சில போட்டிகள் நடந்திருந்ததாலும், அங்குள்ள மூன்று மைதானங்களுக்கு பேருந்திலேயே பயணம் செய்யலாம் என்பதாலேயே அந்த நாட்டை கங்குலி தேர்வு செய்ய, அதன்மூலம் விமான பயணத்தின் செலவு குறைக்கப்பட்டு பிசிசிஐ பெரிய அளவில் வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE

இந்தாண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் விளம்பர வருவாய் குறைந்த நிலையில், வெளிநாட்டில் தொடரை நடத்தினாலும் கடந்த ஆண்டை விட சிக்கனமாக தொடரை நடத்த வேண்டுமென பிசிசிஐ திட்டமிட்டு அதன்படி பல சிக்கன நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக விமான பயணம் இல்லாதது பெருமளவில் செலவை குறைக்க, அடுத்ததாக ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் ஒருபுறம் செலவைக் குறைத்ததாக கூறப்பட்டுள்ளது.

BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE

அனைத்து வீரர்கள் மற்றும் குழுவினர் வெளிநாட்டில் தங்கினால் ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் அதிகமாகும் என்ற நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹோட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்து பெருமளவு செலவை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE

இருப்பினும் ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட, அதையும் சமாளித்த பிசிசிஐ தொடரை சிறப்பாக நடத்தி வெற்றி பெறச் செய்துள்ளது. மொத்தமாக 60 போட்டிகள் எந்த சிக்கலும், தேவையற்ற சர்ச்சையுமின்றி நடந்து முடிந்துள்ள நிலையில், தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையும் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE

இந்த தொடர் முழுவதும் மொத்தமாக 1800 பேருக்கு 30,000 முறைக்கும் மேல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் போட்டிகள் துவங்கிய பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதனால் தடையின்றி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடர் மூலமாக பிசிசிஐ 4000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அடுத்த சீசனில் இதை விட அதிக வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. BCCI Earned Rs 4000 Crore Revenue From IPL 2020 Led By Ganguly In UAE | Sports News.