'கொரோனாவால்' .. 'டி20 உலகக்கோப்பை' நடக்குமா? ரத்து செய்யப்படுமா? .. பலரின் சந்தேகத்துக்கு பதில் கூறிய ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 07, 2020 07:27 PM

கொரோனா வைரஸ் காரணமாக டி20 இருபது ஓவர் உலகக் கோப்பையை ரத்து செய்யும் திட்டமில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

No plans to cancel t20 world cup yet, Says ICC

வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய நோயால் பல உலகளவிலான சர்வதேச போட்டித் தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இருபது ஓவர்  உலகக்கோப்பை போட்டி நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

ஆனால் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதையும், ஒத்தி வைப்பதும் பற்றி இப்போது ஆலோசிக்கப்படவில்லை என்று தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP