VIDEO: ‘என்ன இப்டி பண்ணிட்டாங்க’!.. ஒரு ‘செகண்ட்’ கூட நிக்கல.. பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்டிரம்ப் உடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்து மெலானியா நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதிவியேற்ற போது, அந்த விழாவை புறக்கணித்து வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறினார். இதனை அடுத்து ஃபுளோரிடாவில் டிரம்ப்பும் அவரது மனைவி மெலானியாவும் விமானத்திலிருந்து இறக்கி வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு டிரம்ப் கை அசைத்து போஸ் கொடுத்தார்.
ஆனால் மெலானியா, டிரம்ப் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் இறங்கிய வேகத்தில் நடையை கட்டினார். இதனால் டிரம்ப் தனியாளாக நின்று போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
If “I’m over it” were a person. pic.twitter.com/CLA8WucyXX
— The Lincoln Project (@ProjectLincoln) January 21, 2021
முன்னதாக, அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தபோது அவரை மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின. அதற்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது மெலானியா நடந்துகொண்ட விதம் மேலும் பூதாகரத்தை கிளப்பியுள்ளது. டிரம்ப்பின் மூன்றாவது மனைவியான மெலானியாவை, கடந்த 2005-ம் ஆண்டு டிரம்ப் காதலித்து திருமணம் செய்துகொண்டார். , டிரம்பை விட மெலானியா 24 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
